According to Vakya Panchang 2th August 2016 Guru
transits from Leo to Virgo
Drik Panchang shows 11th August. We give
the effects of Jupiter in Virgo for each rasi on this basis.
மேஷ ராசி
ஏற்கனவே 8ல் சனியால்
பல்வேறு தடைகளை சந்தித்து வருகிறீர்கள். குரு 6ல் தற்போது நகர்வதால் சில கருத்து
விரோதங்களும், உடல் ஆரோக்ய குறைவும் ஏற்படும்.
ரிஷப ராசி
குரு 5ல் பிரவேசிப்பதால்
பண வரவு கூடும். குழந்தைகளுக்கு நன்மை தரும். பல்வேறு வகைகளில் மகிழ்ச்சி தரும்.
மிதுன ராசி
இந்த ராசிக்கு குரு
ஏற்கனவே எதிரி. 4ம் கேந்திரத்தில் நகர்வதால் இட பிரச்சினை, உறவினரால் சிக்கல்கள், சுகமின்மை ஏற்படும்.
கடக ராசி
குரு 3க்கு நகர்வதால்
உதவிகள், நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு பதவி
உயர்வு கிடைக்கும். கல்வியில் தேர்ச்சியும் பாராட்டும் கிடைக்கும்.
சிம்ம ராசி
பண வரவு, ஆபரணம்
மற்றும் பொருள் சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவும்.
கன்னி ராசி
ஜன்ம குரு உடல்
சோர்வு, தடைகளை தரும். இருப்பினும் ஆரம்பத்தில் பெரிய வெற்றிகளையும்
பாராட்டுகளையும் தரும். சிலருக்கு காதல் திருமணம் மற்றவர் ஆதரவுடன் நடைபெறும்.
துலா ராசி
குரு 12ல் வருவதால்
செலவினங்கள் அதிகம் இருக்கலாம். சிலருக்கு இட மற்றும் தொழில் மாற்றத்தை தரும்.
விருச்சிக ராசி
ஜன்மத்தில் சனி
இருந்து சிரமங்களைக் கொடுத்தாலும் 11ல் குரு வருவதால் பல நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
நண்பர்கள், உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் உண்டாகும்.
தனுசு ராசி
ஏழரை சனி
நடைபெறுகிறது. 10ல் குரு வருவதால் தொழிலில் மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு பதவி
உயர்வுடன் வேலைப்பழு கூடும்.
மகர ராசி
இந்த குரு பெயர்ச்சி
இதுவரை உங்களது தடைப்பட்ட வாய்ப்புகள் கிடைக்க வழி விடும். முன்னேற்றங்கள் எளிதாக
அமையும்.
கும்ப ராசி
குரு 8ல் நகர்வதால்
பண நெருக்கடிகள் ஏற்படலாம். மற்றபடி தொழில் நிலை நன்றாக அமையும்.
மீன ராசி
7ல் குரு நகர்வதால் குடும்பத்தில்
திருமண வாய்ப்புகளை உறுதி செய்யும். திருமண உறவுகளில் ஏற்கனவே நிலவி வந்த இடைவெளி
சரியாகும்.
Click for Free Astrologer Advice